சாப்ரா கட்ஸ், தலைமை நிர்வாக அதிகாரி, ஆரக்கிள்
அண்மைக் காலங்களில் மிகவும் துடிப்பான மற்றும் எழுச்சியூட்டும் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. மிகச் சிறந்த அறிவாளர்களும், மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும் இங்கே விரிவாக்கம் செய்கின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் என இந்தியாவில் அரசியல் தலைமைகள், எதிர்காலத்தை நோக்கி விரைந்து செல்வதில் கவனம் செலுத்துகின்றன. விருப்ப உரிமையின்படியான நடைமுறைகளால் இது பாதிக்கப்படவில்லை. குடிமக்களுக்கு அதிகாரம் அளித்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்கும் தன்மையை மேம்படுத்துவதற்கு ஒரே வழி டிஜிட்டல் இந்தியா தான். தலைமைப் பண்பு குழுவினர் அதிகாரம் அளித்தல் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துகின்றனர்; சாதனங்கள் கட்டமைக்கும் எங்களைப் போன்ற கம்பெனிகளுக்கு அளவற்ற வாய்ப்புகள் உள்ளன.