சித்தார்த் ஜராபி, ஆசிரியர், பிசினெஸ் டெலிவிஷன் இந்தியா
“வர்த்தகம் தொடர்பான விஷயங்களை இலக்குடன் கூடியதொரு முயற்சியாக கடந்த நான்கு ஆண்டுகளில் கையில் எடுத்தமைக்காக பிரதமர் மோடி, எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விழைகிறேன். இது மிகவும் பிரம்மாண்டமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னை சந்தேகித்தவர்களின் நோக்கம் தவறு என்பதை பிரதமர் மோடி நிரூபித்திருக்கிறார். அடைவதற்கு மிகவும் கடினமாகத் தொடக்கத்தில் தோன்றுகின்ற, எனினும் அடையக் கூடியதான இலக்குகளை தனது குழுவிடம் தருகின்ற ஒரு பெருநிறுவன தலைவரைப் போலவே அவர் செயல்படுகிறார்.  இத்தகைய அணுகுமுறையின் விளைவு என்னவெனில், இதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் கூட்டாகச் செயல்படவும், வழியில் வரும் தடைகளை அகற்றவும் வழிசெய்கிறது. உதாரணமாக, ஜிஎஸ்டி முறையை அமலாக்குவதில் ஒரு சில பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொண்டபோது, நிதிக்கவுன்சிலும் அரசும் உடனடியாக எங்களது கவலைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டன... இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய தொழில் துறை மட்டுமல்ல; இத்தகைய அடிப்படையான மாற்றங்களைக் கண்டு உலகத் தொழில் துறையும் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளது. இது இந்திய சந்தை வழங்குகின்ற வாய்ப்புகளுக்கு பெருமளவிற்கு உதவிகரமாக இருக்கும்.” – ராகேஷ் பாரதி மிட்டல், தலைவர், இந்திய தொழில்களின் ஒன்றியம், 2018 நவம்பர் 19 அன்று கூறியது. “வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது தொடர்பாக முடிவுகள் எடுப்பதில் நான் கண்ணுற்ற கவனம் என்பது இதுவரை கண்டிராத ஒன்றாகும். இந்த அளவிற்கு வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்த வேறு எந்தவொரு பிரதமரும் இவ்வாறு கவனம் செலுத்தியிருப்பார் என்று நான் கருதவில்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை அவர் தெளிவாகத் தெரிவிக்கிறார். யாருடனும் தனிப்பட்ட நேசம் கொள்ளாமல் வெளிப்படையான வகையில் அதைச் செய்கிறார். குஜராத் மாநிலத்தில் இதை நான் கண்டிருந்தேன். டெல்லியிலும் கூட அனைத்துக் கொள்கை முடிவுகளும் அனைவருக்கும் சமமானதாகவே இருக்கிறது என்பதையும் என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும்.”