சர்வதேச அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நாட்டின் பிரதிநிதியாக நீங்கள் கலந்துகொள்ளும் விதம், நிச்சயமாக எங்கள் அனைவருக்கும் பெருமையளிக்கிறது. மேலும், உற்சாகமளிக்கிறது. இவை அனைத்தும், உங்களது சோர்வில்லா முயற்சிகள் மூலமே சாத்தியமானது. இதன்மூலம், அனைத்து உலக நாடுகள் மத்தியில், சரியான இடத்தைப் பிடித்து, வளர்ந்துவரும் சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. உங்களது தலைசிறந்த தலைமையின்கீழ், தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நீண்டகால அடிப்படையில், சாதாரண மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்பது நிச்சயம். அனைவரும் ஒன்றுசேர்வோம், அனைவரும் வளர்ச்சி பெறுவோம் ("Sab Ka Saath, Sab Ka Vikas") என்ற பிரச்சாரம், சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.