சிலி அதிபர் கேப்ரியல் போரிக் ஃபாண்ட்
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவில் அதிகாரப் பகிர்வு உள்ளது. இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் நீங்கள் வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் எதிராக போராடுகிறீர்கள். உலகில் அமைதி நிலவ உறுதிபூண்டுள்ளீர்கள். பிரதமர் நரேந்திர மோடியால் உலகின் அனைத்துத் தலைவர்களுடனும் பேச முடிகிறது. திரு விளாடிமிர் புடின், திரு டெனால்டு டிரம்ப், திரு ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் தலைவர்கள், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், ஈரான், லத்தீன் அமெரிக்க தலைவர்கள் என அனைவருடனும் பேச முடியும் என்ற நிலையை கொண்டுள்ளார். இது இப்போது வேறு எந்த தலைவராலும் செய்ய முடியாத ஒன்று. இப்போதெல்லாம் புவிசார் அரசியல் சூழ்நிலையில் நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) ஒரு முக்கிய நபர். -