சுதர்சன் பட்நாயக், மணற் சிற்பக் கலைஞர்
“திரு. நரேந்திர மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஒரு பிரதமர் என்ற முறையில் இந்தியக் கலாசாரத்தின் மேன்மையை முன்னிறுத்தி வருகிறார். நமது பிரதமர் நாடு முழுவதும் உள்ள இளம் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார். ஜெகந்நாதர் கோயில், பூரி ஆலயம் ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் கலாசார வளம் மிக்க ஒடிசா மாநிலத்தின் கலைஞன் என்ற முறையில், அவர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். தூய்மை இந்தியா (Swacch Bharat), பெண் குழந்தையைப் போற்றுவோம் பெண்குழந்தைக்குக் கல்வி தருவோம் (Beti Bachao Beti Padhao) என்ற இயக்கங்கள் சாமானிய மக்களின் மனத்தைத் தொட்டுவிட்டன. அவரது இந்த வாசகங்களையும் இயக்கத்தையும் எனது மணற்சிற்பக் கலைமூலம் பிரசாரம் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்”