சுந்தர் பிச்சை, தலைமை நிர்வாக அதிகாரி, கூகிள்
பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிக நல்லதாக இருந்தது. பல்வேறு தொழில்கள் குறித்த கலந்துரையாடலாக அது இருந்தது. இந்தியாவில் அதிகம் முதலீடு செய்வதில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன். ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்காக காத்திருக்கிறோம். அது அமலாவது சிரமமானதாக, எழுச்சி ஊட்டுவதாக இருந்தது. அதை அமல் செய்வதன் மூலம் சீர்திருத்தங்களை எட்ட முடியும் என்பதை அது காட்டுகிறது.