சுப்ரியா தண்டா, உதவித் தலைவர் மற்றும் உள்நாட்டு மேலாளர், வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம்
“வெறும் நான்கு ஆண்டுகளிலேயே 142வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வெறும் தொடக்கம்தான் என்றே நான் நினைக்கிறேன். முதல் 25 இடங்களுக்குள் இந்தியா சென்று அமர்வதைக் காண நான் பெரிதும் விழைகிறேன். முதலீடு செய்வதற்கு என பல்வேறு நாடுகளையும்  உற்று நோக்கி வரும் ஒரு மேற்கத்திய டிஜிட்டல் பெரு நிறுவனத்திடமிருந்து இத்தகைய கருத்து வருவது மிகவும் வசீகரமானதாகத்தான் உள்ளது. இது ஒரு சந்தை என்ற வகையில், முதலீடு செய்வதற்கான ஓர் இடம் என்ற வகையில் லாபகரமானதொரு நாடாக இந்தியாவை மாற்றுகிறது… கவர்ச்சிகரமானதொரு பிரதமர் நம்மிடம் இருக்கிறார். உலகத்தில் மிகச்சிறந்தவர்களில் ஒருவராக நிச்சயம் திரு மோடி விளங்குகிறார்.”