சுல்தான் அகமது பின் சுலைம், டிபி வேர்ல்டின் தலைமை நிர்வாக அதிகாரி
இது சிறப்பான சந்திப்பு. இந்த மனிதர் (பிரதமர் மோடி) அற்புதமானவர். அவரது ஆற்றல், தொலைநோக்குப் பார்வை ஆகியவை எங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது குறித்தும், அதை விரிவுபடுத்துவது குறித்தும் விவாதித்தோம். நாங்கள் தொழில்துறைக்கான நிலத்தைப் பெறுகிறோம், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியில் முதலீடு செய்வோம்... நாங்கள் இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக இருக்கிறோம். எனவே, எங்கள் செயல்பாடு, சந்தை பற்றிய அறிவு பிரதமர் மோடியின் துணிச்சலையும், நம்பிக்கையையும், கொள்கைகளையும் எங்களுக்கு அளிக்கிறது. இது எங்களுக்கு ஊக்கமளித்து, இந்தியாவில் மேலும் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது.