அது மிகச்சிறப்பான சந்திப்பாக இருந்தது. விளையாட்டுகள் பற்றி நாங்கள் விவாதித்தோம். பள்ளிக்கூடத்திலிருந்தே விளையாட்டுகளை பாடத்திட்டமாக வைப்பது முக்கியமானது என்றும் இதனால் அது பாடமாக இருப்பதோடு அனைவராலும் ஏற்கப்படும் என்று பிரதமர் கூறியது இனிமையாக இருந்தது. இத்தகைய வார்த்தைகள் ஊக்கத்தைத் தருகின்றன... இந்தியாவில் ஏற்கனவே நாம் விளையாட்டில் வளர்ச்சி பெற்றுவருகிறோம். இந்திய விளையாட்டுகள் பற்றி மகத்தான பார்வையை அவர் கொண்டிருக்கிறார். மேலும் அதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதற்குத் தேவையானவற்றை செய்வதற்கு ஆழமான ஞானத்தையும் அவர் பெற்றுள்ளார்.