பிரதமர் மோடியை பற்றி நான் பேசும்போது, ஒரு தொலைநோக்கு பார்வையை விரிவுபடுத்தக் கூடிய, அது எப்படி செயல்படப் போகிறது என்பதற்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய, அதில் பொறுப்பேற்க வேண்டியவர்களின் நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய, குழுக்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கக் கூடிய, ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டு வந்ததைப் போன்ற மாற்றங்களை உருவாக்கும் தைரியம் கொண்ட சிலரைப் பற்றி நான் பேசுகிறேன். மெல்ல பின்தொடரும் நிலையில் இருந்து உலக அளவில் புதுமை சிந்தனையை முன்னெடுத்துச் செல்லும் நாடாக இந்தியா மாறும் என்று முன்பு நான் கூறியிருக்கிறேன். 1.3 பில்லியன் மக்கள் மீது அக்கறை கொண்ட அதன் தலைவரின் திறமை அது. இந்த பங்கேற்பை ஏற்படுத்தி, தனிப்பட்ட திறமையால் செயல்படும் அவருடைய நடவடிக்கைகள்தான் இந்த அற்புதமான நாட்டுடன் பங்களிப்பதில் எங்களுக்கு பெருமை கிடைக்கிறது.