ஜின் லிக்கன், தலைவர், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி.
“ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் முக்கிய கூட்டாளி இந்தியா தான். அது இந்த வங்கியில் இரண்டாவது மிகப் பெரிய பங்குதாரர். இந்த வங்கி குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரக சாலைத் திட்டங்களுக்கு நிதி அளித்து கிராமப்புற மக்களுக்கும், சந்தைகளுக்கும் இடையே தூரங்களைக் குறைத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த வங்கியின் தீவிர ஆதரவாளர். சீனத்தலைவர் ஜி-யுடனான அவரது தனிப்பட்ட நட்பு இருநாடுகளுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்தியதால் இதன் தாக்கம் இந்த வங்கியில் வெளிப்பட்டுள்ளது”