ஜீன்-மார்க் அய்ரவுல்ட், பிரெஞ்சு வெளி விவகாரங்கள் மற்றும் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர்
இந்த முடிவின் துணிச்சலால் நான் ஈர்க்கப்பட்டேன். வரி ஏய்ப்பு, ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை ஒழிப்பதில் எந்த அளவுக்கு பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது.டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாறுவதை வேகப்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்தை நவீனமாக்குவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னேற்றங்களை நாங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகிறோம். தொழில்முனைவோருக்கு உத்தரவாதங்கள் அளிப்பதாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் அரசின் முடிவை நாங்கள் நம்புகிறோம்.