ஜெஃப் வெய்னர், முதன்மை செயல் அலுவலர், லிங்க்ட்இன்
“அரசாங்கத்தின் இப்போதைய அறிவிப்புகளையெல்லாம் பார்த்தால், அவையாவும் அரசின் முன் முயற்சிகளுடன் தொடர்புகொண்டவையாகவே இருக்கும். திறன் இந்தியா முழக்கத்துடன் வேலைவாய்ப்பு தொடர்புள்ளதாக இருக்கிறது. தொடக்கம் குறித்த திட்டங்கள் எல்லாம் இந்தியாவில் தொடங்கு என்ற முழக்கத்துடன் தொடர்புள்ளது. இந்தியச் சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பிரதமர் திரு. நரேந்திர மோடி என்னவெல்லாம் செய்கிறார், அவரது இலக்குகள் என்னென்ன என்பனவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தொழில்முனைவோரின் முதலீடுகள்  எல்லாம் பல நாடுகளுக்குச் சென்றிருப்பது வியப்பாக இருக்கிறது. இந்தியாவில் தொடங்கு என்பதற்கான சூழல் வளமாக இருக்கிறது என்பது வெளிப்படையாக உள்ளது. ஓலா, ஃபிலிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத் தக்க அளவு நாட்டில் தடம் பதித்துள்ளன”