“பிரதமர் நரேந்திர மோடியுடன் சில நேரம் செலவிட்டு, திறன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம், இந்தியாவில் தொடங்குவோம் போன்ற நடவடிக்கைகளின் பின்னணி குறித்து பேசும்போது, சமூகஊடகங்களின் மேலாண்மை மட்டுமன்றி, ஆளுமையிலும் தற்காலத்துக்கு ஏற்றவகையில், செயல்படுகிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்துடன், தொழில்முனைவோர் திறன் ஊக்குவிப்பு, தீவிர ஆர்வம் மற்றும் சக்தி ஆகியவற்றை இணைந்து பெற்றுள்ளார் பிரதமர். இதன் பலன்கள் அவர்களிடமே தென்படுகின்றன.”