இந்த நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒருவரைப் பெறுவது நாட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். அவர் பிரதமர் என்பதாலும், அவரது அமைச்சரவையில் நானும் இடம்பெற்றிருப்பதாலும் நான் இதைச் சொல்லவில்லை. நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், நூற்றாண்டில் இல்லாத ஒரு சுகாதார சவால் ஏற்பட்ட போது வீட்டில் முடங்கியிருந்தவர்களுக்கு உணவு அளித்துள்ளார். பெண்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பணத்தை சிறப்பாக நிர்வகிப்பார்கள் என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற சிந்தனைகள் மற்றவர்களுக்கு வராது.