ஜோ பைடன், அமெரிக்க அதிபர்
நான் (ஜோ பைடன்) துணை அதிபராக இருந்தபோதும், நீங்கள் (நரேந்திர மோடி) பிரதமரானபோதும், நாம் ஒன்றாக நிறைய நேரம் செலவிட்டோம். மேலும் - நான் அதிபரான பிறகு, பரஸ்பர நம்பிக்கை, நேர்மை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நாம் உறவைத் தொடர்ந்தோம். இந்த நூற்றாண்டில் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும்.  உங்கள் கூட்டாண்மை மூலம், தடையற்ற, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியம்  பற்றிய எங்கள் பார்வையை முன்னேற்றுவதற்காக, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்ள குவாட் அமைப்பை நாம் ஊக்கப்படுத்தி உயர்த்தியுள்ளோம்.