டாக்டர் நரேஷ் டிரெஹான்
“அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற கனவை விரைந்து நிறைவேற்றியவர் நரேந்திர மோடி. இது தேசிய சுகாதார உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் மூலமே முடிந்தது. இந்தத் திட்டத்தின்கீழ், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நோயாளிகளுக்கு ரூ.1 லட்சம் வரை சுகாதாரக் காப்பீடு கிடைத்தது. இதன்மூலம், தீவிரமான நோய்களுக்கும் கூட, இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடிகிறது.”