டாக்டர் பி. ஆர். ஷெட்டி, தலைவர், என்.எம்.சி. ஹெல்த் கேர் நிறுவனம்
“வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நாடுகளின் வரிசையில் நமது தரவரிசை இப்போது 77வது இடத்தை எட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிப்படைத் தன்மை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றின் விளைவாக இந்தியாவிற்கு வருவது இப்போது எளிதாகியுள்ளது. விதிமுறைகளைக் கூறி காலந்தாழ்த்தும் நிலைமை இப்போது இல்லை. முதலீடு செய்வதற்கான ஒரே சிறந்த நாடாக இப்போது இந்தியா உள்ளது. நல்ல நிர்வாகத்துடன் அது முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”