டாக்டர் ரஷீத் அகமது பின் பஹத், அமைச்சர், ஐக்கிய அமீரகம்
பெரிய பாரம்பரியத்துடன் அமைதி, அன்பு என்ற பொதுவான மாண்புகளை இந்தியாவும் ஐக்கிய அமீரகமும் பகிர்ந்து கொண்டுள்ளன. இரு சமூகங்களிலும் மிகவும் பழமையான உறவுகள் உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐக்கிய அமீரகத்துக்கு மேற்கொண்ட பயணம், புதிய உறவுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. அதிக வளர்ச்சி விகிதம் காரணமாக ஐக்கிய அமீரகத்தின் முதலீட்டுக்கான, மிகவும் கவர்ச்சிகரமான சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஐக்கிய அமீரகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கில் கட்டமைப்பு, எரிசக்தி, சுற்றுலாத் துறைகள் உயர் முன்னுரிமை கொண்டவையாக உள்ளன. குறுகிய எதிர்காலத்தில் பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பதில் நிறைய வாய்ப்புகளை அளிப்பதாக இவை இருக்கும்.