பிரதமர் அவர்களே, உங்களது சக்தி மற்றும் இயக்க ஆற்றலால், இந்தியாவுக்கு தலைமை வகித்ததன் மூலம், பல்வேறு தரப்பினருக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டமைப்பில் நீங்கள் செய்துள்ள முதலீடு, டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நனவாக்கி வருகிறது. இணையதள இணைப்பில், இரண்டாவது மிகப்பெரும் நாடாக இந்தியா மாறியுள்ளது. உங்களது கொள்கைகள், மக்களை மேம்படுத்தியுள்ளது. இந்திய மக்களின் சிறப்பான திறனை பயன்படுத்தச் செய்துள்ளது. உலகுக்கு அவர்கள் உதாரணமாக திகழ்கின்றனர்.