இந்தியா சரியான பாதையில் செல்கிறது என்று நான் கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி சரியான முடிவுகளை எடுக்கிறார். அவர் தனது நாட்டு மக்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். அதைத்தான் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது சிறந்தது என்று நான் நினைக்கிறேன். விண்வெளித் துறை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக பங்களிக்கிறது என்பது எனது கருத்து. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டம் மிகவும் கடினமானது என்று நான் நினைக்கிறேன். ஆனால் அந்த இலக்கை நோக்கி இந்தியா நம்பமுடியாத வேகத்தில் செல்கிறது. இதற்கான எனது வாழ்த்துக்கள்! சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் செல்வதைப் பார்க்கப்போகிறோம். இதன் மூலம் இந்தியா பயனடையும்.