திரு. எம், நிறுவனர், மானவ் ஏக்தா மிஷன்
திரு. எம்-மின் வாழ்த்துகள். ஆம், நான் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை நான்கு முறை சந்திக்கும் பேறினை பெற்றேன். அது குறித்து பேசுவதற்கு முன்பாக, பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தனது வளங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் நீங்கள் தேசத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும். இறுதியாக, நாம் தொண்டராக இருந்து உயர்ந்த ஒருவரை பிரதமராக பெற்றுள்ளோம். அவர் பிறக்கும்போது வெள்ளி கரண்டியுடன் பிறக்காததால், அவர் சாமான்ய மக்களின் நாடித் துடிப்பை அறிந்துள்ளதுடன் கடினமாகவும் பணியாற்றுபவர் ஆவார். அன்றொரு நாள், அவருக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர், திரு.மோடி அவர்களை, “களைப்பில்லாமல் அவர் மட்டும் பணியாற்றுவதுடன் பிறரையும் பணியாற்ற வைக்கும் வித்தியாசமான கர்ம யோகி” என வருணித்தார். அதன் முடிவுகள் பார்க்கிறோம்: நமது அண்டை நாட்டினர் பொறமை கொள்ளும் அளவிற்கு நமது பொருளாதாரம் உயர்ந்துள்ளது. குழப்பமான நிலையிலிருந்து ஒழுங்கான முறைக்கு மாற்றி அமைப்பது எளிதானதல்ல. சில பிரச்சினைகளும் உள்ளன. சில ஆண்டுகளாக அமுங்கியிருந்தவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன, உதாரணமாக காஷ்மீரில் வன்முறை, வெறுப்பு குறித்த விவாதம், பசு பாதுகாப்பின் தீமை அம்சங்கள் போன்றவை முன்பு தேநீர் விற்ற சிறுவன் தற்போது பிரதமராக உள்ளதை பொறுத்துக் கொள்ள இயலாத சிலரின் மகிழ்விற்கு இடமளித்துள்ளது. பாற்கடலை கடைந்தபோது அமிர்தம் உருவாகி வருவதற்கு முன்பாக நஞ்சு முதலில் தோன்றும் என்பதை உங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். நாம் அமிர்தத்திற்காக காத்திருப்போம். அது தானாகவே தம்மை உருவாக்கி வரும் என நம்பிக்கை கொள்வோம். நான் இனி பிரதமருடனான எனது தனிப்பட்ட சந்திப்புகள் பற்றி கூறுகிறேன். முதல் சந்திப்பு அவர் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தபோது அகமதாபத்தில் நடைபெற்றது. அப்ரன்டைஸ்டு டூ ஏ இமாலயன் மாஸ்டர் என்ற எனது சுயசரிதையின் குஜராத் மொழிபெயர்ப்பு நூல் துவக்கி வைக்கப்பட இருந்தது. திரு.நரேந்திர மோடி அவர்கள், பி.ஜே.பி.யின் அதிகாரபூர்வ பிரதம மந்திரி வேட்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் அன்று மாலை டெல்லிக்கு சென்றாக வேண்டும். எனவே, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நான் காலையில் வரவழைக்கப்பட்டேன். ஒன்றுமில்லாத என்னை அவர் தனிப்பட்ட முறையில் என்னை வெகுவாக வரவேற்ற அவரின் பண்பையும், குணாதிசயத்தையும் கண்டு பிரமித்து போனேன். பிரதமராக வரப்போகிற ஒருவர், மிகவும் எளிமையாக இருந்தார். சமூக நல்லிணக்கத்திற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நெடும்பயணத்தை துவக்க உள்ளதை நான் தெரிவித்த போது, அவர் எனக்கு உற்சாகமளித்து, குஜராத்தில் உதவுவதாக அவர் கூறினார். அப்போது நீங்கள் டெல்லியில் இருப்பீர்கள் என நான் கூறியபோது அவர் கருத்து ஏதும் கூறாமல் புன்னகை புரிந்ததை நான் நினைவில் கொண்டுள்ளேன். அடுத்த சந்திப்பு, அவர் பிரதமர் ஆன ஒரு மாதத்திற்கு பின்பாக நடைபெற்றது. அமெரிக்காவிற்கு நான் புறப்படுவதற்கு முன்பு அவரை சந்திக்க கோரியிருந்தேன். நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மீண்டும், 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் மிகுந்த சுமூகமாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. நாங்கள் இருவர் மட்டுமே. உடன் எந்த உதவியாளரோ அல்லது செயலாளரா இல்லை. நாங்கள் உரையாடினோம். அவர் தனது பொறுப்புகளை மிகுந்த சிரத்தையுடன் மேற்கொள்கிறார். மூன்றவாது சந்திப்பு பெங்களூரில் நடைபெற்ற பி.ஜே.பி. தேசிய செயற்குழு கூட்டத்தின்போது நடைபெற்றது. பாதயாத்திரை பெங்களுரை கடந்து சென்றுக் கொண்டிருந்தது. அவர் என்னை ராஜ் பவனில் சந்தித்தார். அவர் எனது உடல்நலம் குறித்தும், பாதயாத்திரை குறித்து கேட்டறிந்ததுடன், முக்கியமான அறிவுரைகளையும் வழங்கினார். நான்காவது சந்திப்பு மீண்டும் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது. பாதயாத்திரை தில்லியை நெருங்கிக் கொண்டிருந்தது. வெறுப்பு குறித்த விவாதம் ஊடகங்களில் தினமும் வெளிவந்தவண்ணம் இருந்தது. அவர் மிகுந்த அக்கறையை காட்டியதுடன் சமூக நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்காக மீண்டும் ஒருமுறை தனது வாழ்த்தினை தெரிவித்தார். இருப்பினும், மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வானது, பாதயாத்திரை காலை 6.30 மணிக்கு குஜராத்தில் நுழைந்தபோது, எனது உதவியாளர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொடர்புக் கொள்ள விரும்புவதாக கூறினார். கற்பனை செய்து பாருங்கள், இணைப்பு உடன் அளிக்கப்பட்டு, பிரதமர் நேரடியாக பேசினார். "குஜராத் உங்களை வரவேற்கிறது. எல்லாம் சரியாக இருக்கிறதா? உங்கள் உடல்நலம் எவ்வாறு உள்ளது" என்றார். நம்மை போன்ற பெரிய நாட்டின் பிரதமராக உள்ள அவர் முன் பெரும் பொறுப்புகள் இருக்கும் நிலையில், அவர் பாதயாத்திரையை தொடர்ந்து கவனித்து வந்து, குஜராத்தில் நுழையும் சரியான தருணத்தில், அரசியல் முக்கியத்துவம் இல்லாத என்னை போன்றோரிடம் அவர் பேச வேண்டும் என அவர் நினைத்ததே அவரை பற்றி வெளிப்படுத்தியது. சிலர் பேயாக கருதும் ஒருவரின் மனிதாபிமான பக்கத்தை இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன். தற்போது அவரது 66வது பிறந்தநாளையொட்டியும், அவரது அரசின் மூன்றாண்டு நிறைவுற்றதையொட்டியும், நான் அவருக்கு ஒரு வேண்டுகோளுடன் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்: ஐயா, உங்கள் பிறந்தநாளில் நல்லெண்ணத்தில் அடையாளமாக, எனது தாய் மாநிலமான வடக்கு கேரளாவில் நீங்கள் தனிப்பட்ட முறையில் இடது மற்றும் வலது சாரிகளுக்கு இடையயான பெரும் வன்முறைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தையை தயவுசெய்து துவக்கி வைக்க வேண்டும். அதே போன்று காஷ்மீரிலும் செய்ய வேண்டும். கேரளாவை பொறுத்தவரை, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். இந்த இக்கட்டான நிலையை முடிவுக்கு கொண்டு வர இதுவே தருணமாகும். அதை பிரதமரான உங்களால் மட்டுமே க முதல் கா வரை (கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை) செய்ய இயலும் ஐயா. மீண்டும் ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்துக்கள்.