திரு.சந்திரஜித் பானர்ஜி, டைரக்டர் ஜெனரல், சி.ஐ.ஐ.
நாட்டின் வரி விதிப்பு முறையில், ஜி.எஸ்.டி. மிகப் பெரிய சீர்திருத்தமாகும். பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பல்வேறு பல்நிலையிலான மறைமுக வரிகளை சரக்கு மற்றும் சேவை வரி அகற்றும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் பல மத்திய மற்றும் மாநில அளவிலான வரிகளை உள்ளடக்கி, நாட்டை தேசிய விற்பனைச் சந்தையாக உருவாக்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியானது, வருங்காலங்களில் மிகவும் தேவையான வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகளவிலான முதலீடுகளை கொண்டு வருவதுடன், அதிகளவிலான வரி வருவாய் மற்றும் முதலீடுகள் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சில சதவீத புள்ளிகளை உயர்த்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.