இந்தியா அதன் சாத்தியங்களை இன்னும் அடைய வேண்டியுள்ள நிலையில், (பிரதமர்) திரு.மோடி அவர்களின் ஆட்சியின் கீழ், தற்போது பொருளதார புலியாக காணப்படுகிறது. $2 டிரில்லியன் அமெரிக்கா டாலர்கள்-பொருளாதார செயல்திறனை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது...மேலும், இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத் துறை மகிழ்ச்சியடையும் வகையில், பல்வேறு தீவிர தொழில்நுட்பம்-சார்ந்த முயற்சிகளை பிரதமர் துவக்கியுள்ளார். செங்கோட்டையில் ஆற்றிய தனது முதல் உரையின்போது திரு.நரேந்திர மோடி அவர்கள், ஊரகம்-நகர்ப்புறம் இடையே உள்ள இடைவெளியை இணைப்பதற்கு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் தொடர்புகள் குறித்து தொடர்ந்து பேசி, நாடு முழுவதும் 6 லட்சம் கிலோமீட்டர்களுக்கு "பிராட்பேண்ட் நெடுஞ்சாலை"களை உருவாக்கியுள்ளார். பிரதமரின் விருப்பத் திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா, ஒவ்வொரு குடிமகனுக்கும் டிஜிட்டல் உட்கட்டமைப்பை அளிப்பதையும், அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அதிவிரைவு இன்டர்நெட் வசதியை அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது...இந்திய அரசின், முனைப்புத் திட்டமான இந்தியாவில் துவங்குவோம், நாட்டில் புதிதாக துவங்குவதற்கான வலுவான சுற்றுச்சூழலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது...‘புதிதாக துவங்குவோம் இந்தியா, எழுந்துநில் இந்தியா’ போன்ற முயற்சிகளில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் நேரடியாக ஈடுபாடு கொண்டுள்ளதால், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.