நியாயமான விலையில் மேலும் பொருட்களை வாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் ஜிஎஸ்டி. கார்கள் விலை குறைவதைப் பார்க்கிறோம். சில அடுக்குமாடி வீடுகள் விலை குறைகின்றன. சிலவற்றின் விலை சிறிது உயர்ந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வர்த்தகத்துக்குச் சாதகமானது. இந்தியாவில் எளிதில் வணிகம் செய்வது அதிகரிக்கும். எனவே, இது உண்மையிலேயே நல்லது.