இந்தியா மனிதக் கழிவுகளுக்கான போரை வென்றுள்ளது... மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, பொது சுகாதாரம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தைரியமான கருத்தொன்றை தெரிவித்தார். அது இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரிடமிருந்து நான் கேட்காத ஒன்றாகும்...அத்தகைய முக்கிய பொருள் குறித்து வெளிப்படையாகவும், பொது இடத்திலும் பேசக்கூடிய தேசியத் தலைவரை பிறிதொரு காலத்தில் காண்பேன் என நான் நினைக்கவில்லை.