திரு. பெஞ்சமின் நேதன்யாஹூ, பிரதமர், இஸ்ரேல்
இஸ்ரேலுக்கு நல்வரவு...என் நண்பரே, உம்மை வரவேற்கிறோம். நாங்கள் உங்களுக்காக நெடுங்காலமாக காத்திருக்கிறோம். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்... ஐக்கிய நாடுகளில் நடைபெற்ற நமது முதல் சந்திப்பின்போது –இந்தியா மற்றும் இஸ்ரேல் உறவுகள் என வரும்போது, வானமே எல்லை – என நீங்கள் கூறியதை நான் நினைவில் கொண்டுள்ளேன். ஆனால் பிரதமர் அவர்களே, தற்போது, நான் அதில் மேலும் கூடுதலாக சேர்க்கிறேன் – நாம் வான்வெளியிலும் கூட்டாக உள்ளோம். நீங்கள் உலகின் மிகப் பெரிய தலைவர்... (இந்திய-இஸ்ரேல் உறவுகளுக்காக) நாம் ஒன்றாக, மேலும், மேலும் சிறந்தவற்றை செய்வோம்.