பிரதமர் திரு. மோடி அவர்களே, உங்களது 'இந்தியாவில் உருவாக்குவோம்' திட்டம், எனது 'இந்தியாவுடன் உருவாக்குவோம்' என்ற கொள்கையுடன் ஒத்துள்ளது. நம்மிடையே உள்ள தொழில்நுட்பத்தில் கூட்டுறவை அதிகரிக்கும் வண்ணம் நாம், 40 மில்லியன் டாலர் கண்டுபிடிப்பு நிதியை, ஆரம்ப நிதியாக கொண்டு ஏற்படுத்தியுள்ளோம். நமது பங்களிப்பு நீர், விவசாயம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பிறத் துறைகளில் விரிவடைந்துள்ளது. நான் வெற்றிக்கான சூத்திரம் எளிதானது என நம்புகிறேன். அது ஐ2, டி2. அதாவது – இந்தியத் திறமை, இஸ்ரேலிய தொழில்நுட்பம் என்பதாகும். இது நாளைய இந்திய-இஸ்ரேல் உறவுகளை சமப்படுத்துவதாகும்