இந்தியாவில், நாம் இந்த நற்சந்தையை காண்பதன் காரணம், பிரதமர் திரு. நரேந்திர மோடி உருவாக்கிவரும் சீர்திருத்தங்களே ஆகும் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, வரிச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது, அது மிக, மிகப் பெரிய வெற்றியாகும். (சமீபத்திய மாநிலங்களுக்கான) தேர்தல்களில் அவர் பெற்றுள்ள வெற்றி, சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையை மக்களிடையே அளித்துள்ளது. இவையே இந்த பேரணியின் முக்கிய காரணிகளாக உள்ளன. பணமதிப்பிழக்கச் செய்தல் நடவடிக்கை திரு. மோடியை வலுவிழக்கச் செய்யுமோ என நான் வருந்தியிருந்தேன், ஆனால், உண்மையாக, அது நடைபெறவில்லை. அவர் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இந்த திரளணி தொடரும் என நான் நினைக்கிறேன்.