உலகின் பிற நாடுகளுக்கு பொருளாதாரத்தைத் திறந்து விடும் வகையில் இந்தியாவின் மனப்பான்மையை பாரதப் பிரதமர் திரு. மோடி மாற்றி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை. இந்தியப் பொருளாதாரத்தை விரிவாக மேம்படுத்தும் சீர்திருத்தங்களை அவரது அரசு செயல்படுத்த முனைகிறது. கட்டுமானத்தில் முதலீடு செய்வது முதல் கிராமப்புற மக்கள் சொத்து உருவாக்குவதற்கு உதவும் வகையில் செயல்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வரலாற்றுச் சிறப்பு மிக்கது.