திரு. முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நாட்டு மக்களை மட்டுமல்லாது, உலகத்தையும் மற்றும் தொழில்நுட்பத்தையும் புரிந்துக் கொண்டுள்ள தலைவரை பெறுவதற்கு நாம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். பிரதமர் அமெரிக்கா சென்றபோது (அப்போது திரு. பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தார்), உணவுநேரத்தில், அவர்கள் தொழில்நுட்பத்தை எவ்வாறு ஏழைமக்கள் பயன் பெறுவதற்கும், வகையிலும், நாட்டை வளர்ப்பதற்கும் பயன்படுத்தலாம் என விவாதித்தது என்னை மிகவும் கவர்ந்தது