“பெரிய பொருளாதாரத்தில் இந்தியா இன்றைக்கு இருப்பதைப் போல் முன்பு எப்போதுமே வலுவான நாடாகத் திகழ்ந்ததில்லை. ஒரு வல்லமையான தலைமையின் ஆதரவுடன் மிக முக்கிய கொள்கை மாற்றங்களைப்பின்பற்றி, நாடு அபரிதமான வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை நிரூபித்து வருகிறது. இந்தியாவில் உள்ள நமக்கு மிக மிக சாதகமான அம்சங்கள் உள்ளன. வளர்ச்சிக்கு வழியுள்ள நிலையில், மிகப் பெரிய பொருளாதார சக்தியாகத் திகழ்கிறோம் ”
கட்டுமானத் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது பல சமயம் எதுவுமே நடைபெறவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த நிலை இல்லை. மெல்ல மெல்ல வளர்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய வங்கிகளின் பிரச்சினைகள் தொடரும் நிலையில், சீனாவின் ஏராளமான பொருள் உற்பத்தி ஆகியவை ஒரு புறம் இருக்க, மறுபுறம் முக்கியமான உலக பங்குச் சந்தையில் உச்சத்தை எட்டும் நிலையில் எப்போதும் இருக்கிறது”