துர்ப்ஜோதி போரா, தலைவர், அசோம் சாகித்ய சபை
“நமது தேச வரலாற்றின் மிகவும் நெருக்கடியான சமயத்தில், நமது நாட்டை தலைமை வகித்துச் செல்வதற்கு விதியால் தேர்வு செய்யப்பட்டவர் மோடி அவர்கள். நாடு என்ற இந்தக் கப்பலை, தொலைநோக்குப் பார்வை, மனவலிமை மற்றும் திடத்துடன் மிகவும் தைரியமாக வழிநடத்துகிறார் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவே நமது நாட்டை மேம்படுத்தவும், வளர்ச்சி அடையச் செய்யவும் சரியான பாதையில் வழிநடத்திச் செல்கிறது. நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடும், நாட்டு மக்களும் அதிக அளவில் எதிர்பார்த்துள்ளனர்.