உலகளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒரு சிறந்த இடத்தில் உள்ளது. கொவிட் தொற்றுநோய் காலத்தின் போது மற்ற நாடுகள் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்தியா அதில் இருந்து ஓரளவு தப்பித்துள்ளது. இந்தியாவில் மனை வணிகம் நன்றாக நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணம் இந்தியப் பொருளாதார வளர்ச்சிதான். இந்தியாவில் உள்ள வட்டி விகிதங்கள் மிகவும் நியாயமானவை என்று நான் நினைக்கிறேன்.