பாபா கல்யாணி
”பிரதமர் மோடி குறைந்த காலத்திலேயே உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெற்ற தலைவர்.  இந்திய பொருளாதாரத்தை உலகின் அதிவேகமாக முன்னேறும் பொருளாதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்த வளர்ச்சியில் அவர் காட்டும் அக்கறை பல லட்சம் மக்களின் வருங்காலத்தை பிரகாசமாக மாற்றியுள்ளது.  மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா போன்ற பிரதமரின் பல்வேறு திட்டங்கள் இந்தியாவை சமன்பாடுமிக்க பொருளாதார மற்றும் தொழிற்துறை சக்தியாக விரைவில் மாற்றும்.