பாபா ராம்தேவ்
மோடி அவர்கள், வாக்கு வங்கி அரசியல் நடத்தும் நபர் அல்ல. நாட்டை கட்டமைப்பதற்காக பணியாற்றி வருகிறார். நாட்டிற்கு  உள்ளும், வெளியேயும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறார். நாட்டிற்காக சிறந்த கொள்கைகளை உருவாக்குவதும், செயல்படுத்துவதுமே அவரது முதன்மை குறிக்கோள். உலக அளவில் இந்தியாவை புதிய உச்சத்துக்கு அவர் கொண்டு சென்றுள்ளார். எந்த அரசுக்கும் இவை மிகப்பெரும் பொறுப்புகள். இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொள்ளும் மோடி அவர்கள், எப்போதுமே நாட்டின் செழுமையான பாரம்பரியம் குறித்தே பேசுகிறார். அவர் எப்போதுமே, நாட்டின் பழங்கால சிறப்புகள் குறித்து பேசுகிறார். மேலும், தற்காலம் குறித்த கனவையும், நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்த கருத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார்.