டிஜிட்டல் புரட்சிக்கு இந்தியா முன்பே தயாராகிவிட்டது. இது செயற்கை நுண்ணறிவுடன் அடுத்த கட்டத்தை நோக்கிய முன்னேற்றத்திற்கு உதவும். வங்கி அமைப்பு, நிதிச் சேவை அமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கும்போது, நாடு உண்மையில் மிகப்பெரிய அளவிலான உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்தியா மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையை இது உறுதிப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.