“பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடன் நான் மேற்கொண்ட முதல் உரையாடல் அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோதுதான். குஜராத் சுற்றுலா வளர்ச்சிக்கான விளம்பர ஏஜென்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது, என்னுடன் சுருக்கமாக தனிப்பட்ட முறையில் உரையாடினார். குஜராத்தின் வரலாறு, அதன் கலாசாரம், கிர் மலைப்பகுதிகள், குஜராத் துறவியர், மனிதர்களும் சிங்கங்களும் இணக்கமாக வாழும் முறை ஆகியவற்றையெல்லாம் குறிப்பிட்டார். அந்த இடங்களில் எல்லாம் அவர் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்ததைப் போலவே விவரித்தார். என்னைப் பொறுத்தவரையில் அவையெல்லாம் அவரது அறிவின் வெளிப்பாடு மட்டுமல்ல. ஞானம், பேரார்வம் ஆகியவை குறித்த பாடமாகத் தோன்றியது”