பியுஷ் பாண்டே
“சுற்றுலா பிரசாரப் படத்துக்கான எனது முதல் படப்பிடிப்பு கிர் காட்டில் தொடங்கியது. அதையடுத்து , திரு. நரேந்திர மோடி அவர்கள் திரு பச்சனுடன் தொலைபேசியில் பேசினார். பிறகு என்னை அழைத்தார். அப்போது, அவர் வழக்கமான விளம்பரதாரரைப் போல் “படப்பிடிப்பு எப்படி இருந்தது” என்று வழக்கமாகக் கேட்பார் என்று நினைத்து தொலைபேசியை எடுத்தேன். மாறாக, “எங்கள் மக்கள் (குஜராத்) உங்களை நன்கு கவனித்துக் கொள்கிறார்களா” என்று அவர் கேட்டபோது, என் காதுகளையே நம்ப முடியவில்லை. அத்துடன் இல்லை.  “அமிதாப்ஜி நாட்டின் நம்பிக்கை. நீங்களோ எங்களது நம்பிக்கை (Amitabhji desh ki amaanat hain, aur aap hamari)” என்று கூறினார். தலைமைக்கு இது ஒரு பாடம் என்று இதை எப்போதுமே மறக்க மாட்டேன்”