பிரெட் கெம்பே, தலைமைச் செயல் அதிகாரி, அட்லாண்டிக் கவுன்சில்
ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் என எதுவாக இருந்தாலும், வணிகம், அரசியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா இல்லாத இடமே உலகில் இனி இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் உலகளாவிய தடம் அதிகரித்து வருகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இது காலப்போக்கில் மிகவும் முக்கியமான இடத்திற்குச் செல்லும் என்று நான் நினைக்கிறேன். உலகளாவியத் தென் பகுதி நாடுகள் இந்தியாவை அரவணைக்கின்றன. இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது. ஐரோப்பாவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. எனவே, இவை  எல்லாம் நன்மை பயக்கும் என்று நான் நினைக்கிறேன்.