பிரேம் வத்ஸா, தலைமை நிர்வாக அதிகாரி, பேர்பாக்ஸ்
திரு. மோடி நம் கண் எதிரே இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கிறோம்.  பொருளாதார வளர்ச்சி மீது ஒரே மனதுடன் கவனம் செலுத்துவது முன் எப்போதும் இல்லாத நடவடிக்கை. ஊழலை வேரறுக்கும் நடவடிக்கை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக இந்தியாவின் லீ குவான் யூ -வாக இருப்பார் என எதிர்பார்க்கிறோம் என்று திரு. மோடியிடம் நான் கூறினேன்.