2014ம் ஆண்டு மே மாதம் தேர்தலில் திரு. நரேந்திர மோடி மகத்தான வெற்றிபெற்று பிரதமர் ஆனதை அடுத்து, இந்தியாவின் அரசியல் நிலைமை விறுவிறுப்பாக மாறியது. திரு. மோடி சாதாரண நிலையிலிருந்து உயர்வு பெற்றவர். குஜராத்தில் பல முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர். ஆறரை கோடி மக்களை அவர் 13 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.