புதிய உயிர்காக்கும் கருவிகளை தயாரிப்பதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது - அதன் பொது சுகாதார அமைப்பு 2.2 பில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியுள்ளது. அவர்கள் கோ-வின் எனப்படும் வெளிப்படையான தளத்தை உருவாக்கினர், இது கோடிக்கணக்கான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள அனுமதித்து, தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களையும் வழங்கியது.