பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் எங்களை அழைத்து ஊக்கப்படுத்துகிறார். கடந்த ஒலிம்பிக்கில் நாங்கள் பின்னடைவை சந்தித்த பிறகும், அவர் எங்களை நேரில் அழைத்துப் பேசினார். பிரதமரே இதுபோன்ற ஆதரவை வழங்குவது பெரிய ஊக்கமளிக்கிறது. இது நிதி உதவி தொடர்பானது மட்டுமல்ல; இது பிரதமரும் நாடும் எங்களுக்கு வழங்கும் அசைக்க முடியாத ஆதரவாகும்.