பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே
நான் பிரதமர் நரேந்திர மோடியுடனான, லெக்ஸ் ஃப்ரிட்மேன் நேர்காணலைக் கேட்டேன். நான் அதை ஆங்கிலத்தில் கேட்டேன். இந்தியிலும் கேட்டேன். எனக்கு இந்தி அதிகம் தெரியாது என்றாலும், அதை அசல் மொழியில் கேட்க விரும்பி, நான் பிரதமரிடம் தெரிவித்தேன். நான் சொன்னேன், “மூத்த சகோதரரே, நான் அந்த போட்காஸ்டைக் கேட்டேன். அதில் நான் ஒரு ஆன்மீகத் தலைவரைப் பார்த்தேன். நான் ஒரு ஆன்மீக குருவின் பேச்சைக் கேட்பது போல் உணர்ந்தேன். இது மிகவும் நிறைவாக இருந்தது” என்றேன். -