பெஞ்சமின் நெதன்யாஹு, பிரதமர், இஸ்ரேல்
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற எனது நண்பர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தேர்தல் முடிவுகள், ஒரு தலைவராகவும், உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயகத்தை தலைமையேற்று நடத்திய உங்கள் வழிகாட்டுதலுக்கும் கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாகும். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நமது மகத்தான நட்பை மேலும் வலுப்படுத்த ஒன்று கூடி உழைப்போம், புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வோம். வாழ்த்துக்கள் எனது நண்பரே!