“ துடிப்பான குஜராத் உச்சிமாநாடு இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியையும், உலகப் பொருளாதாரத்திற்கு அது ஆற்றியுள்ள பெரிய பங்கினையும் கொண்டாடுவதாக அமைந்துள்ளது. எனது அருமை நண்பரான பிரதமர் மோடியை இந்த உச்சிமாநாட்டை தொடங்கியதற்காகப் பாராட்டுகிறேன். இந்தியாவை புதுமைப் படைப்பின் ஆற்றல் மூலம் எதிர்காலத்திற்கு கொண்டு செல்லும் அவரது தொலைநோக்கையும் பாராட்டுகிறேன். சென்ற ஆண்டு நான் குஜராத்தில் பயணம் மேற்கொண்ட நாட்களையும், அப்போது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் நான் ஒரு போதும் மறக்க இயலாது. இப்போது நமது இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் வலுவானது. இருநாடுகளும் இணைந்து அளவிடற்கரிய சாத்தியக்கூறுகளை பகிர்ந்து கொள்ளலாம்”