பேராசிரியர் இயான் மார்ட்டின், டீக்கின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
இந்தியாவில் கல்வி, திறன் மேம்பாடு, ஆராய்ச்சியின் எதிர்காலம் குறித்து நாங்கள் உண்மையிலேயே சிறப்பான உரையாடலை நடத்தினோம்... நாளை, கிப்ட் சிட்டியில் முதல் சர்வதேசத் துணை வளாகத்தைத் திறந்து வைக்கிறோம்... 100 இடங்களுக்கு ஏற்கனவே 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, அதிக ஆர்வம் உள்ளது... இந்த மாநிலம் (குஜராத்) மிக விரைவாக மாறி வருகிறது. நீங்கள் ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும் நீங்கள் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் காணலாம். மக்கள்தொகை அதிகரித்து வருகிறது, குஜராத்தின் உலகளாவிய கண்ணோட்டம் மாறி வருகிறது, மேலும் மிகவும் விரிவடைந்து உலகின் பிற பகுதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.