இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகள். உங்களது துடிப்பான தலைமையின் கீழ் இந்தியாவை முன்னோக்கி தொடர்ந்து பயணிக்க செய்வீர்கள். அதற்காக உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது தலைமையின் கீழ், தற்போது நிலவும் இருதரப்பு உறவுகளை நமது இரு நாடுகளும் வலுவாக கட்டமைக்கும் என்றும், நமது உறவினை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் நாங்கள் நம்புகிறோம்.