மதன் ஆர். கிருஷ்ணன், உதவித் தலைவர் மற்றும் இந்தியாவிற்கான மேலாண்மை இயக்குநர், மெட்ட்ரானிக் நிறுவனம்
“பிரதமர் நரேந்திர மோடியின் சுறுசுறுப்பும், எதையும் செய்ய முடியும் என்ற அவரது மற்றும் அவரது அரசின் அணுகுமுறையும் மிகுந்த உற்சாகமளிப்பதாக உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அடையமுடியாது என்று தோற்றமளிக்கும் ஓர் இலக்கை அவர் நிர்ணயித்திருந்தார். இப்போது அந்த இலக்கை அடையும் வகையில் மிக நெருக்கத்தில் வந்து விட்டார். ஜிஎஸ்டி, திவால் மற்றும் நொடிப்புக்கான விதிமுறைகள் போன்ற அரசின் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சில சீர்திருத்தங்களின் விளைவு தரவரிசையில் முற்றிலுமாக மாற்றம் ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சீர்திருத்தங்கள் வேகம் பிடித்திருப்பதை என்னால் காண முடிகிறது. வெறுமனே சிறு அடிவைப்புகளையே நாம் காண்கிறோம் என்பதல்லாமல் பிரதமரின் சரியான வழிகாட்டுதலுடன் சரியான நடவடிக்கைகளின் மூலம் இதே வேகம் தொடரும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.”